×

பட்ஜெட் துளிகள் 2022-23… கல்விக்கு 200 சேனல்கள்

நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசும்போது கூறியதாவது:கொரோனா பெருந்தொற்றால், கிராமப்புற பகுதிகளில் உள்ள  தலித்துகள், பழங்குடியினர் மற்றும்  பின்தங்கிய பிரிவை சேர்ந்த மாணவர்கள் 2 ஆண்டுகள் கல்வி படிப்பை இழந்துள்ளனர். கல்வி இழப்பை ஈடு செய்ய ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தனித்தனியாக கூடுதல் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும். தற்போது, 12 ஆக இருக்கும் சேனல்கள் 200 ஆக அதிகரிக்கப்படும். * தொழில்சார்ந்த படிப்புகளில் மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் விதமாக அறிவியல் மற்றும் கணிதத்தில் இந்த ஆண்டு 750 மெய்நிகர்  ஆய்வு கூடம் அமைக்கப்படும்.* இன்டெர்நெட், செல்போன்கள், தொலைக்காட்சி மற்றும்  ரேடியோக்களின் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்று கொடுப்பதற்கு, அனைத்து மொழிகளிலும் மிக சிறந்த வகையில் பாடங்கள் உருவாக்கப்படும். * மாணவர்கள் தங்கள் வீட்டிலேயே கல்வியை கற்பதற்கு வசதியாக, டிஜிட்டல் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.* குஜராத் மாநிலம் ‘கிப்ட்’ நகரில் நிதி மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் போன்ற பிரிவுகளில் வகுப்புகளை நடத்துவதற்கு உலக தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களுக்கு  அனுமதி அளிக்கப்படும். சுகாதாரம்* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்பு உருவாக்கப்படும். இதில் மருத்துவ வசதி வழங்குவோர்,மருத்துவ வசதிகள் உள்ளிட்ட  பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.* நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியம் என அரசு உணர்ந்துள்ளது. இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.* அதன் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு மிஷன் சக்தி, மிஷன் வாத்சால்யா, சாக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.* வட கிழக்குவட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்காக, ‘பிஎம் டிவைன்’ என்ற திட்டம் வட கிழக்கு கவுன்சிலின் மூலம் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும்.* சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட்வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக  நவீன முறையிலான ‘சிப்’ பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்படும்.இ பாஸ்போர்ட்டில் தனிநபரின் விவரம் குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே, உயர் அதிகாரிகளுக்கு இ பாஸ்போர்ட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.* நகர்புற மேம்பாடு கொள்கை வகுக்க உயர்மட்ட குழு இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவையும் போது, மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நகர்ப்புறங்கள் வசிப்பார்கள். இதனால், நகர்புற மேம்பாடு என்பது முக்கியமாக உள்ளது. நகர்புற மேம்பாட்டுக்கான புதிய கொள்கையை வகுப்பதற்கு உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும்.மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கு பதில் பேட்டரியை மாற்ற முடிவு* மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பேட்டரியை மாற்றி கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த மையங்களில் தங்களின் பேட்டரியை மாற்றி விட்டு வேறு பேட்டரியை வாங்கி கொள்ளலாம்.அதே நடைமுறை* பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை நேற்று காலை 8.45க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கினார்.* காலை 8.45 மணிக்கு நிதியமைச்சகத்துக்கு அவர் வருகை தந்தார். நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி, பகவத் காரத் உடன் வந்தனர்.* வழக்கமான நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். * பின்னர், நாடாளுமன்றத்துக்கு வந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.* இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசிக்கத் தொடங்கினார்.* முன்னதாக, சிகப்பு நிற துணிப் பையில் பட்ஜெட் உரை அடங்கிய டேப்லட்டை அவர் கொண்டு வந்து, பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.* ஒன்றிய பட்ஜெட்டா? குஜராத் பட்ஜெட்டா? தயாநிதி மாறன் எதிர்ப்புநிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், குஜராத் மாநிலம், கிப்ட் நகரத்தில் சர்வதேச தீர்ப்பாயம் மையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகதா ராயும்,  திமுக எம்பி தயாநிதி மாறனும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இது ஒன்றிய பட்ஜெட்டா? அல்லது குஜராத் மாநிலத்துக்கான பட்ஜெட்டா? இது, குஜராத் மாநிலத்துக்கு மட்டுமே நன்மை அளிக்கும்,’ என்று இருவரும் கூறினர். மேலும், 2022ம் ஆண்டு, ஜனவரி வரையில் ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறியபோது, ஜிஎஸ்டி.யில் இருந்து மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும்படியும் வலியுறுத்தினர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது….

The post பட்ஜெட் துளிகள் 2022-23… கல்விக்கு 200 சேனல்கள் appeared first on Dinakaran.

Tags : Union Budget ,Parliament ,Finance Minister ,Nirmala Sitharaman ,Corona ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...