×

பட்ஜெட் துளிகள் 2022-23…எதிர்க்கட்சி எம்பிக்களுடன் வலிய சென்று பேசிய மோடி

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனே,  எதிர்க்கட்சி எம்பி.க்கள் இருக்கும் பகுதிக்கு திடீரென சென்ற பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்கள், எம்பி.க்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார். திரிணாமுல் தலைவர்கள் சுசீப் பண்டோபாத்யாய், சுகதா ராய், காங்கிரசை சேர்ந்த கேரள எம்பி கொடிகுன்னில் சுரேஷ், கோவா எம்பி பிரான்சிஸ்கோ சார்டின்கா, மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, திமுக எம்பி தயாநிதி மாறன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்பி. என்கே பிரேமசந்திரன், ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்பி கிருஷ்ண தேவராயலு லாவு, சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா ஆகியோருடன் சிரித்த முகத்துடன் கலந்துரையாடினார். முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் திமுக எம்பி.யுமான ராஜாவிடம் கை குலுக்கி வாழ்த்தினார். ஆனால், பட்ஜெட் உரை முடிந்ததுமே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவையை விட்டு உடனேயே வெளியேறி விட்டார். இந்த சந்திப்பின்போது, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்காரை திரும்ப பெற்று கொள்ளும்படி திரிணாமுல் எம்பி. சுகதா ராய் பிரதமரைக் கேட்டுக் கொண்டார். அதே போல், கடந்த டிசம்பரில் நடந்த கோவா விடுதலை தின நிகழ்ச்சிகள் குறித்து கோவா எம்பி. பிரான்சிஸ்கோவிடம் பிரதமர் கேட்டறிந்தார். மோடியின் இந்த செயல், வழக்கத்துக்கு மாறாக இருந்தது. இது, எதிர்க்கட்சியினருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.* எத்தனால் கலக்காத பெட்ரோல் விலை ரூ.2 உயர்கிறதுபெட்ரோல், டீசல் விற்பனையில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் முதற்கட்டமாக எத்தனால் கலக்காத பெட்ரோலுக்கும், எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் இடையே வித்தியாசம் காட்டும் வகையில் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் எத்தனால் கலக்காத பெட்ரோலுக்கு ரூ.2 கூடுதலாக வரி உயர்த்தப்படுகிறது. இதனால் எத்தனால் கலக்காத பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.* ஏகலைவனுக்கானது அல்ல… துரோணாச்சாரியருக்கானது: மல்லிகார்ஜூன கார்கே பதிலடிதனது பட்ஜெட் உரையின்போது மகாபாரதத்தை மேற்கோள்காட்டி பேசிய நிர்மலா சீதாராமன்,  ‘தர்மத்துக்கு உட்பட்டு நாட்டை ஆண்டு தர்மத்துக்கு இசைவான வரிகளை வசூலிக்க வேண்டும். பழங்கால நூல்களில் இருந்து ஞானத்தை பெற்று அரசு முன்னேற்றப்பாதையில் தொடர்கிறது,’ என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘ஒன்றிய பட்ஜெட் ஏழைகளுக்கானது அல்ல. மோடியின் நண்பர்களுக்கானது. பணக்காரர்களுக்கானது. இது ஏகலைவனுக்காக போடப்பட்ட பட்ஜெட் அல்ல. அர்ஜூணனுக்காகவும், துரோணாச்சாரியாருக்காகவும் போடப்பட்ட பட்ஜெட் என்று எனக்கு புரிகிறது,’ என்று தெரிவித்தார்.ஆளுங்கட்சி கைத்தட்டல் எதிர்க்கட்சிகள் சலசலப்புநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 90 நிமிட பட்ஜெட் உரை வழக்கம் போல, ஆளுங்கட்சியினரின் கைத்தட்டல்கள், எதிர்கட்சியினரின் விமர்சனத்துக்கு இடையே வாசிக்கப்பட்டது.* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘டேப்லெட்‘ மூலம் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசித்தார்.* பட்ஜெட் உரை சிறியளவிலான ப்ரீப் கேஸ்’-ல் வைத்து எடுத்து வரப்படுவது வழக்கம்.  இம்முறை பட்ஜெட் உரை அடங்கிய டேப்லெட்-ஐ இந்திய அரசின் சின்னம் பொறித்த, சிகப்பு உறையிட்ட பையில் கொண்டு வந்திருந்தார். * மக்களவை வளாகத்தினுள் வந்த போது, பெண் அமைச்சர்கள் ஷோபா கரந்த்லஜே, தர்ஷனா ஜர்தோஷ், மபி. பெண் எம்பி. ரீத்தி பதாக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.* ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் கையை உயர்த்தி `தம்ஸ் அப்’ சைகை காட்டி சென்றார்.* மக்களவைக்குள் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து உள்ளே நுழைந்ததும் `ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே, ஹரஹர மகாதேவ்’, என்று வாழ்த்தி பாஜ உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.* பிரதமர் மக்களவை இருக்கையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். * மக்களவை அதிகளவு எம்பி.க்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.* மாநிலங்களவையில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.* காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் உரை முழுவதும் தனது `டேப்லெட்’டிலேயே மூழ்கி கிடந்தார்.* பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.* ஏர் இந்தியா, என்ஐஎன்எல் விற்பனை, எல்ஐசி விற்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் பேசிய போது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.* எம்பி.க்கள் பலர் பட்ஜெட் உரையின் நகல் தங்களிடம் இல்லாமல் திகைத்தனர். பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்ட பின்னர், நகல் வழங்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.* உரை இடையே நிர்மலா சீதாராமனுக்கு லெமன் ஜூஸ் அளிக்கப்பட்டது. அதை அவர் பருகினார். …

The post பட்ஜெட் துளிகள் 2022-23…எதிர்க்கட்சி எம்பிக்களுடன் வலிய சென்று பேசிய மோடி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Modi ,Dinakaran ,
× RELATED மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைப்பு