×

சித்தராமையாவின் கரங்களை வலுப்படுத்துவோம் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இல்லை: டி.கே.சிவகுமார் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சியமைத்ததில் இருந்தே, டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவது குறித்த குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடந்த திங்கள் மற்றும் நேற்று ஆகிய இரண்டு தினங்களும் பெங்களூருவில் எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பல கருத்துகள் கூறப்படுகின்றன. கட்சிக்குள் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கட்சியில் ஒழுக்கம் முக்கியம். தலைமை (முதல்வர்) மாற்றம் குறித்த பிரச்னை இல்லை. அதுதொடர்பான விவாதமே இல்லை. ஒரு அவசரமும் இல்லை. சித்தராமையா தான் நமது முதல்வர் என்றார்.

The post சித்தராமையாவின் கரங்களை வலுப்படுத்துவோம் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இல்லை: டி.கே.சிவகுமார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Chief Minister ,Karnataka ,D.K. Shivakumar ,Bengaluru ,Congress party ,2023 assembly elections ,Karnataka State Congress Party ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...