×

காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தில் புது மணமகன் பலி

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வீரநந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் நிச்சயம் செய்யப்பட்ட புது மணமகன் தினேஷ் (24) உயிரிழந்தார். நேற்று பிறந்தநாளை கொண்டடாடி விட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கு குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்டுமன்னார்கோவில் அருகே விபத்தில் புது மணமகன் பலி appeared first on Dinakaran.

Tags : Kattumannarkovil ,Cuddalore ,Dinesh ,Veeranandapuram National Highway ,Thiruppanandhal ,Thanjavur district ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...