×

சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பழைய இரும்பு குடோனில் தீ விபத்து: 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சேலம்:  சேலம் மாவட்டம் மேச்சேரியில் பழைய இரும்பு குடோனில் பற்றிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர். பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள செட்டியார் வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென்று பெரும் வெடிப்பு சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அலறி அடித்து வெளியே வந்து பார்த்த போது அங்குள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ள குடோனில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான வீதியாக இருந்ததால் தீயணைப்பு வண்டிகள் செல்வதற்கும் துரிதமாக செயல்படுவதற்கும் சற்று கடினமாக அமைந்தது. நேற்று இரவு 11 மணியளவில் ஒரு திடீரென பெரிய சத்தம் கேட்டது, எனவே நாங்கள் உடனே வெளியே வந்து பார்த்தோம், அப்போது அந்த இரும்பு குடோன் தீப்பற்றி எரித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் உடனே தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தோம். அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரப் போராட்த்திற்கு பிறகு தீயை முழுமையாக அனைத்தனர் என அங்கு வசித்து வந்த மக்கள் பேட்டியளித்தனர். பணைமரம் உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயால் பெரும் அளவு புகைமூட்டம் நிலவியது. இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் மது போதையில் வீசி சென்ற சிகரெட் துண்டால் தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  …

The post சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பழைய இரும்பு குடோனில் தீ விபத்து: 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Mechery, Salem district ,Salem ,Salem district ,Mechery ,
× RELATED சேலம் வாலிபரிடம் ₹6.48 லட்சம் மோசடி