×

குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ சஸ்பெண்ட்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் போடாட் தொகுதி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ உமேஷ் மக்வானா. இவர் கட்சியின் தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோரை கட்சி புறக்கணிப்பதாக கூறி கட்சி பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக உமேஷ் மக்வானார்நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் இசுதான் காத்வி வெளியிட்ட அறிக்கையில், ‘‘ கட்சி விரோத, குஜராத் மாநிலத்தின் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக உமேஷ் மக்வானா, கட்சியில் இருந்து 5 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். ஆம்ஆத்மி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ ஒருவர் போர்க்கொடி தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Gujarat Aam Aadmi Party MLA ,Ahmedabad ,Aam Aadmi Party MLA ,Podat ,Gujarat ,Umesh Makwana ,national secretary ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...