×

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டு முடிவடையும்: மாநிலங்களவையில் நிதின் கட்கரி விளக்கம்

டெல்லி: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டு முடிவடையும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடர்பாக மாநிலங்களவை இன்று கூட்டப்பட்டது. அப்போது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் தாமதம் தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காகவும், திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரனோ பேரிடரால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நெடுஞ்சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டு முடிவடையும் எனவும் கூறினார். 550 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 42 கிலோ மீட்டர் நீளமுள்ள வில்லுக்குறி – கன்னியாகுமரி சாலை திட்டம், ரூ.300 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ மீட்டருக்கு சென்னை – தடா இடையிலான ஆறு வழி சாலை, ரூ.45 கோடி மதிப்பீட்டில் 30 கிலோ மீட்டருக்கு செட்டிகுளம் – நந்தம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டம், ரூ.211 கோடியில் 65 கிலோ மீட்டருக்கு விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு இடையிலான நெடுஞ்சாலை திட்டம், ரூ.1,345 கோடி மதிப்பீட்டில் சோழபுரம் – தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை திட்டம், காரைக்குடி-ராமநாதபுரம் இடையிலான 80 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை திட்டம், உள்ளிட்ட 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டு முடிவடையும் என தெரிவித்துள்ளார். …

The post தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டு முடிவடையும்: மாநிலங்களவையில் நிதின் கட்கரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nitin Gadkari ,Rajya Sabha ,Delhi ,Central Road Transport Department ,
× RELATED நாக்பூர் தொகுதியில் போட்டியிடும்...