×

2 மாதங்களாக நிரம்பிய நிலையில் வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீர்மட்டம் தொடர்ந்து 69 அடியிலேயே நீடித்து வருவதால், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியிடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து உள்ளது. கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 3 முறை முழு கொள்ளவை எட்டியது. இதனால்  அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடிநீருக்காக அணையில் இருந்து வழக்கம் போல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. உசிலம்பட்டி வட்ட பாசனத்திற்கு 58ம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்டது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர், வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கும், 58ம் கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், சீரான நீர்வரத்து தொடர்ந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 69 அடிக்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். …

The post 2 மாதங்களாக நிரம்பிய நிலையில் வைகை அணை: 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vaiga Dam ,Antipatti ,Vaigai dam ,Andipatti ,2 ,Joy ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...