×

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பதிவு; பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்ததாக பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தமிழகத்தில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தேவாலயத்தை இடிக்கவில்லை என்று மர்ம நபர் ஒருவர் வீடியோ ஒன்று பதிவு ெசய்து இருந்தார். அந்த வீடியோவை பாஜ செயற்குழு உறுப்பினரான சவுதா மணி என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ‘தைரியமா? விடியலுக்கா?’ என்று தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். இதுகுறித்து சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் புகார் என்பதால் இந்த வழக்கு சென்னை மாநகர மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது சைபர் க்ரைம் போலீசார் கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பதிவு; பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Twitter ,Baja ,Sawda Mani ,Chennai ,Sawuda Mani ,Paja ,Sawda Ham ,
× RELATED தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி...