×

திருப்பூரில் பரபரப்பு பப்ஜி விளையாடிய மாணவன் கையை வெட்டிய முதியவர் கைது

திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (19). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கார்த்தி தனது நண்பர்களுடன் வீட்டிற்கு  எதிரில் உள்ள ராமசாமி (60) என்பவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடினார். இதனை ராமசாமி கண்டித்து வேறு இடத்தில் போய் விளையாடுமாறு கூறியுள்ளார். இதில் கார்த்திக்கிற்கும், ராமசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமசாமி அரிவாளால் கார்த்தியின் கையை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார், ராமசாமியை நேற்று இரவு கைது செய்தனர். …

The post திருப்பூரில் பரபரப்பு பப்ஜி விளையாடிய மாணவன் கையை வெட்டிய முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Karthik ,Murukampalayam rock ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்