×

கருவாழக்கரை சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

 

செம்பனார்கோயில், ஜூன் 19: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கருவாழக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்பாள் உடனாகிய சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கால பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மேளதாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், கால பைரவருக்கு திருவிளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக சோமசுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்பாளுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post கருவாழக்கரை சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Theipirai Ashtami ,Karuvazhkarai ,Somasundareswarar Temple ,Sembanarkoil ,Mayiladuthurai district ,Kala ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்