நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பார்சன்ஸ் வேலியில் 11 செ.மீ., மேல் பவானியில் 10 செ.மீ., எமரால்டு, சேரங்கோட்டில் தலா 7 செ.மீ. மழை பதிவானது. தேவாலா 6 செ.மீ., கூடலூர் 5.7 செ.மீ., பந்தலூர் 5.4 செ.மீ., சிறுமுள்ளி, நடுவட்டத்தில் 4.4 செ.மீ. மழை பெய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் இன்று சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன .நீலகிரியில் அதிகனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரையில் அவலாஞ்சியில் 300மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் நேற்று தென் மேற்கு பருவமழை பெய்த நிலையில், படிப்படியாக மழை பெய்வது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்வது குறையும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மாலைக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்வது தீவிரம் அடைந்தது. இன்று அது படிப்படியாக குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தென்மேற்கு பருவமயைின் தீவிரம் குறைந்து வங்கக் கடலோரத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும் எனவும் மேற்கில் இருந்து வரும் காற்று கிழக்கு நோக்கி சென்று விடும் எனவும் இருப்பினும் 18ம் தேதி வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் மாலை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! appeared first on Dinakaran.
