×

விபத்தில் சிக்கிய வெங்காய லாரி

நல்லம்பள்ளி, ஜூன் 14: தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெங்காயம் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் நேற்று மாலை வெள்ளக்கல் அருகேயுள்ள சுங்கச்சாவடியை கடக்க முயன்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சுங்கச்சாவடி தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தபினார். தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று, விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் சிக்கிய வெங்காய லாரி appeared first on Dinakaran.

Tags : Nallampally ,Salem ,Dharmapuri-Salem National Highway ,Vellakkal ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு