- பாலக்கோடு
- பிராந்திய போக்குவரத்து அலுவலர்
- ஜெயதேவராஸ்
- தர்மபுரி மாவட்டம்
- பாலக்கோடு மோட்டார்
- இன்ஸ்பெக்டர்
- பாலசுப்ரமணியன்
- பைபாஸ் சாலைகள் பிரிவு…
- தின மலர்
பாலக்கோடு, ஜூன் 14: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராசுக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணியன் புறவழி சாலை பிரிவு ரோட்டில் தீவீர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஆட்டோ, டிராக்டர், பள்ளி வாகனம் மற்றும் கர்நாடகா பதிவெண் கொண்ட மினி சரக்கு லாரி ஆகியவைகள் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பாலக்கோடு பகுதிகளில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 9 பொக்லைன் உள்ளிட்ட 31வணிக வாகனங்கள் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் ரூ.3 லட்சத்து 25ஆயிரத்து 740 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலைவரி செலுத்தாத பள்ளி வாகனம், டிராக்டர், ஆட்டோ, மினி சரக்கு லாரி என 6 வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
The post 31 வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.
