புதுச்சேரி, ஜூன் 14: புதுவையின் பல சிறப்புகளில் சூரியன் எப்.எம்,மும் ஒன்று. 2007ம் ஆண்டு புதுச்சேரியில் முதன்முதலில் துவங்கப்பட்ட பண்பலை என்ற பெருமைக்குரிய சூரியன் எப்.எம் அன்று முதல் இன்று வரை பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரதாரர்களையும் நேயர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் காலம் சென்ற பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து கடலூரில் மாபெரும் ரிதம் இசை நிகழ்ச்சியை நடத்தியது. அதனை தொடர்ந்து இசையமைப்பாளர்கள் தேவா, டி.இமான், விஜய் ஆண்டனி உள்பட பல திரை நட்சத்திரங்களை அழைத்து வந்து மாபெரும் ரிதம் இசை நிகழ்ச்சியை ஆண்டுத்தோறும் சூரியன் எப்.எம் நடந்தி வருகிறது.
இந்நிலையில் 7-வது முறையாக இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இன்று (14ம் தேதி) மாலை 5 மணிக்கு புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.இதில் இசைஞானி இளையராஜா இசையமைத்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட பல பாடல்களை, பிரபலமான பாடகர்கள் பாடுகின்றனர். அந்த வரிசையில் பாடகர்கள் எஸ்.பி.பி. சரண், ஹரிச்சரன், மது பாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காலத்தால் அழியாத, இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை பாடுகின்றனர்.உங்களுக்கான டிக்கெட்டுகளை டிஸ்ட்ரிக்ட் ஸ்மோடோ மற்றும் புக் மை ேஷா செயலில் பெறலாம், என்ட்ரி பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சூரியன் எப் எம் வழங்கும் ரிதம் இசை நிகழ்ச்சியை பாண்டி ராம் தங்கநகை மாளிகை, கோல்ட் பிரீமியம் ரீபைண்டு சன் பிளவர் ஆயில், புதுச்சேரி தங்க மாளிகை, பண்ருட்டி ஜே.கே.ஆர் டெக்ஸ், கணேஷ் செராமிக்ஸ், முத்து சில்க் ஹவுஸ், சிட்டி யூனியன் வங்கி, மணி எலக்ட்ரானிக்ஸ், ராஜா டிரேடர்ஸ், மினிஸ்டர் காட்டன், வெஸ்ட்மெட் மருத்துவமனை, ஆச்சாரியா கல்வி குழுமம், பாண்டிச்சேரி ஹோட்டல் காமாட்சி, எல்.ஜி ராம் ஷாப் பெஸ்ட் ஷாப், அபிராமி ரெசிடென்சி, தட்சசீலா யூனிவர்சிட்டி, ரோட்டரி க்ளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல், விநாயகா மிஷன் ஸ்கூல் ஆப் அல்லைட் ஹெல்த் சயின்சஸ், பிஆர்எஸ் அன்ட் கோ, எஸ்.வி. ஜீவல்லர்ஸ், முத்து சில்க் பிளாசா, விழுப்புரம் கலர்ஸ், கேவி ஓவெர்செங்ஸ், சுவாஷ்டிக் எலக்ட்ரானிக்ஸ், சி பைபர்நெட், நியூகோ எலக்ட்ரிக், நல்ல தம்பி மெஸ், யோக்டோ எண்டர்டெய்ன்மெண்ட், யூ அண்ட் மீ மீடியா, நம்ம பாண்டிச்சேரி, ரமணி இன்சூரன்ஸ் ஆகியோர் வழங்குகின்றனர்.
The post சூரியன் எப்.எம். சார்பில் ரிதம் இளையராஜா இசை கச்சேரி புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகத்தில் இன்று மாலை நடக்கிறது appeared first on Dinakaran.
