- பாபர் அசாம்
- ரிஸ்வான்
- டி 20 ஐஎஸ்
- லாகூர்
- பாகிஸ்தான் கிரிக்கெட்
- மேற்கிந்திய தீவுகள்
- வங்காளம்
- ஆகிப் ஜாவேத்
- அலீம் தார்
- அசார் அலி
- தின மலர்
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக டி.20 தொடர்களில் ஆட உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு அடுத்த வாரம் நடைபெற உள்ளது. முன்னாள் வீரர்களான ஆகிப் ஜாவேத், அலீம் தார், அசார் அலி மற்றும் ஆசாத் ஷபிக் ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்ய உள்ளனர்.
இதனிடையே மூத்த வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின்ஷா அப்ரிடி ஆகியோருக்கு இனி டி.20போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தேர்வுகுழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஏற்கனவே பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் ஆகியோர் இனி டி20 தொடருக்கு அவர்கள் தேவையில்லை என்றும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
The post பாபர் அசாம், ரிஸ்வானுக்கு இனி டி.20ல் வாய்ப்பு இல்லை appeared first on Dinakaran.
