×

சென்டர் மீடியனில் மோதி கார் தீப்பற்றியது சென்னை வாலிபர்கள் உயிர் தப்பினர்

மயிலம்: சென்னை, ரெட்ஹில்சை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37), இவர் நண்பர்களான ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், ஆவடி நந்தகோபால் ஆகியோருடன் காரில் திருத்தணி மற்றும் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் கோயிலுக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை தீவனூர்-கூட்டேரிப்பட்டு சாலையில் கொடிமா கிராமம் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றி எரிந்தது. உடனே காரில் இருந்த 3 பேரும் கதவை திறந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து திண்டிவனம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர்.

 

The post சென்டர் மீடியனில் மோதி கார் தீப்பற்றியது சென்னை வாலிபர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Mayilam ,Sathishkumar ,Red Hills, Chennai ,Anand ,Nandagopal ,Oorapakkam, Avadi ,Thirutani ,Tiruvannamalai ,temple ,Tindivanam ,Villupuram district.… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...