×

அக்னி கலசம் அகற்றப்பட்டதை கண்டித்து வன்னியர் சங்க ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

கலசபாக்கம்: திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகே சாலையோரம் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1989ல் அக்னி கலசம் வைக்கப்பட்டது.  சாலை விரிவாக்க பணிகளுக்காக அக்னி கலசம் சமீபத்தில் அகற்றப்பட்டது. சாலை பணிகள் முடிந்ததும் பாமகவினர் மீண்டும் அக்னி கலசத்தை அமைத்தனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு போலீசார் மற்றும் அதிகாரிகள் அக்னி கலசத்தை அகற்றி கலசபாக்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், 28ம் தேதி பாமகவினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி நாயுடுமங்கலம் கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்ட வந்தார். இதையொட்டி வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் 1000த்திற்கும் மேற்பட்டோர் நாயுடுமங்கலம் கிராமத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது….

The post அக்னி கலசம் அகற்றப்பட்டதை கண்டித்து வன்னியர் சங்க ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Govt ,Vanniyar Sangh ,Agni ,Kasam ,Kalasabakkam ,Tiruvannamalay-Vellore road ,Nayudumangalam Goodurod ,Vanniyar Society ,Vanyar Union ,
× RELATED ஆந்திராவில் வன்னியர் சங்கத்தினர்...