×

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்… பனிப்புயலில் தீவிரத்தால் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்!!

வாஷிங்டன் : அமெரிக்கா கடற்கரை பகுதிகளை அதிதீவிர பனிப் புயல் தாக்கியுள்ளது. பாம்ப் சைக்ளோன் ஏற்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து இருக்கும் இந்த பனிப் பொழிவால்,  நியூயார்க், நியுஜெர்சி, பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பனிப்புயல் காரணமாக ஏறத்தாழ ஆயிரத்து 400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலால் வெப்பநிலை 0 டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது. மேலும் சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்குள் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர்.  தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக் கிடப்பதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கடும் பனிப் பொழிவால் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. ஏறத்தாழ 7 கோடி பேர் மின்சாரமின்றி பாதிக்கப்ட்டுள்ளனர். பனிபொழிவின் தீவிரத்தால் 5 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 4 இன்ச் வரை பனி துகள்கள் குவிந்து வருகின்றன. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

The post அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்… பனிப்புயலில் தீவிரத்தால் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்!! appeared first on Dinakaran.

Tags : Blizzard ,US ,Washington ,United States ,Bomb Cyclone ,America ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...