×

ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததால் இன்று நம்பிக்கை துரோக நாள் கடைபிடிப்பு: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாயிட் அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றி துரோகம் இழைத்தது விட்டதாகவும், இதனை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று நம்பிக்கை துரோக நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாயிட் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நரேந்திரமோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்தும், அந்த 3 சட்டங்களை திரும்பப் பெற கோரியும் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல இடங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு வாக்குறுதிகளுடன் கூடிய கடிதம் ஒன்று ஒன்றிய அரசு சார்பில் போராடிய விவசாய சங்கங்களின் தலைவர்களிடம் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு சொந்த ஊர் திரும்பினார்கள்.ஆனால் நரேந்திரமோடி அரசு தனது கடிதத்தில் அளித்திருந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும், விவசாயிகளை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டதாகவும் மிகப்பெரிய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாயிட் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் இன்று நம்பிக்கை துரோக நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.       …

The post ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததால் இன்று நம்பிக்கை துரோக நாள் கடைபிடிப்பு: பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாயிட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Betrayal of Faith Day ,union ,Bharatiya Kisan Union ,president ,Rakesh Digaid ,Delhi ,Union Government ,Betrayal Day ,
× RELATED தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில்...