×

கொச்சியில் வீடு கட்டினார் அபர்ணா

சென்னை: மலையாளத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா தாஸ். தமிழில் டாடா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த அபர்ணா தாஸ் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.மலையாளத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அபர்ணா தாஸ், தமிழில் பீஸ்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் அபர்ணாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. கவின் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது சில படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார் அபர்ணா.

இந்நிலையில் கொச்சியில் புதிதாக வீடு கட்டி குடிபோயிருக்கிறார். வீடு கட்டும்போது எடுத்த வீடியோவையும் இப்போது வீடு கட்டி முடித்ததும் எடுத்த வீடியோவையும் இணைத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று எனக்கு தெரியும். ஆனால், இது எனது மிகப்பெரிய மைல்கல். எனது சொந்த வீடு’ என்று பதிவிட்டுள்ளார்.

The post கொச்சியில் வீடு கட்டினார் அபர்ணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aparna ,Kochi ,Chennai ,Aparna Das ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆவடி அருகே பரபரப்பு காட்டு பூனை பிடிபட்டது