×

5வது டி20 போட்டி இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் தொடரை வென்றது: `4 பந்தில் 4 விக்கெட்’ எடுத்து ஜேசன் ஹோல்டர் அசத்தல்

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்து இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது டி20 போட்டி பார்படாசில்  இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீசின் ஓபனர்கள் பிரண்டன் கிங் 34 (31), கைல் மேயர்ஸ் 31 (19) இருவரும் நல்ல துவக்கம் தந்தனர். அடுத்து கேப்டன் பொல்லார்டு 25 பந்தில் 4 ரன்னும், பாவெல் 17 பந்தில் 35 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஓபனர்கள் ஜேசன் ராய் 8 (5), டாம் பண்டன் 16 (12) இருவரும் சோபிக்கவில்லை. கேப்டன் மொயின் அலியும் 19 பந்தில் 14 ரன் எடுத்து அவுட்டானார். இருப்பினும் ஜேம்ஸ்வின்ஸ், சாம் பில்லிங்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததால், அந்த அணி வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறியது. அடுத்து வின்ஸ் 55 (33), ஆட்டமிழந்த நிலையில் கிறிஸ் ஜோர்டன் களமிறங்கினார். இங்கிலாந்து வெற்றிபெற 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஓடியன் ஸ்மித் வீசிய ஓவரில் சாம்பில்லிங்ஸ் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஜோர்டனும் ஒரு பவுண்டரி அடித்ததால், அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை வீசிய கார்ட்ரேல் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.இறுதியில் கடைசி ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர், முதல் பந்தை நோபாலாக வீசினார். இருப்பினும் ப்ரீ ஹிட் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் ஜோர்டன் (7), பில்லிங்ஸ் (41) அடில் ரஷித் 0 (1), ஷகிப் மேக்மூத் 0 (1) தொடர்ந்து ஆட்டமிழந்தனர். இதனால், ஹோல்டர் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். டி20 கிரிகெட்டில் ஹாட்ரிக் எடுக்கும் முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான்.இறுதியில், இங்கிலாந்து அணி 160 ரன்களை மட்டும் சேர்த்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தொடரையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து இதே அணிதான் இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட் கைப்பற்றிய ஹோல்டருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது….

The post 5வது டி20 போட்டி இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் தொடரை வென்றது: `4 பந்தில் 4 விக்கெட்’ எடுத்து ஜேசன் ஹோல்டர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : 5th T20 match ,England ,WestIndies ,Jason Holder ,Bridgetown ,West Indies ,T20 ,5th T20 ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...