- தர்மபுரி
- அசோக் குமார்
- சிப்கோ தொழில்துறை எஸ்டேட்
- அதியமான்கோட்டை, தர்மபுரி மாவட்டம்
- சுமித்ரா
- சிப்கோ
- தின மலர்
தர்மபுரி, ஜூன் 4: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை சிப்கோ தொழிற்போட்டையில் வசித்து வருபவர் அசோக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இவர் சிப்கோ கூட்டுறவு அலுவலராகவும், செயலாட்சியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் சொந்தமாக பாலிதீன் பை செய்து கொடுக்கும் பணியையும் செய்து வந்தனர். தற்போது அந்த கம்பெனி மூடப்பட்டு விட்டது. அவ்வப்போது அங்கு சென்று சுத்தம் செய்வர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3மோட்டார் மற்றும் கம்ப்ரசர் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தது தெரிந்தது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வெங்கட்டம்பட்டி தேங்காமரத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் தர்மா(19) மற்றும் 3 சிறுவர்கள் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தர்மாவை போலீசார் கைது செய்தனர். அதே போல், 3சிறுவர்களையும் பிடித்து சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
The post மின்மோட்டார் திருடிய சிறுவர்கள் உள்பட 4பேர் கைது appeared first on Dinakaran.
