×

மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை: புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தேஜ கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருவதால் ஒன்றிய அரசின் நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. இதை எதிர்த்து புதுச்சேரி மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர், சங்கத் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தனியார் மயமாக்கலுக்கு எதிராக பிப்.1ம்தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக இக்குழுவினர் அறிவித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம் நேற்று எச்சரித்துள்ளார். இருப்பினும் நாளை திட்டமிட்டபடி மின்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர்  தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மின்துறையில் 4 பிராந்தியங்களிலும் மொத்தம் 1,500க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள் நாளை முதல் ஒட்டுமொத்தமாக 4 பிராந்தியங்களிலும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும்பட்சத்தில் மின்துறை பராமரிப்பு பணிகள், மின் கட்டணம் வசூல் உள்ளிட்டவை முடங்கும் அபாயம் ஏற்படும். இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் அருள்மொழியிடம் கேட்டபோது, மின்துறை ஊழியர்களின் போராட்டம் நாளை (பிப்.1 முதல்) திட்டமிட்டப்படி நடைபெறும் என கூறினார்….

The post மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை: புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Union Government ,Daja Alliance ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை