×

வட சென்னை 2 அப்டேட் சொன்ன சந்தோஷ் நாராயணன்

கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம்வ சென்னை. இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறனுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது வட சென்னை 2 படம் குறித்து தான் அளித்த பேட்டியில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதில், வட சென்னை படத்தில் ராஜன் என்ற சுதாபாத்திரத்தை மையப்படுத்தி ராஜன் வகையறா என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிடுவதற்கு தயாராக வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். அந்த படத்தை அவர் சீக்கிரமே வெளியிட வேண்டும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

The post வட சென்னை 2 அப்டேட் சொன்ன சந்தோஷ் நாராயணன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Santhosh Narayanan ,Vetiramaran ,Dhanush ,Aishwarya Rajesh ,Andrea ,Aamir ,Samuthirakani ,Vetrimaran ,Kollywood Images ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்