×

ஞாயிறு ஊரடங்கு ரத்து எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைவர். கடந்த சில நாட்களாக ஊரடங்கு எதிரொலியால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் கோயில்களும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சிதம்பரம் மற்றும் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், முழு ஊரடங்கு இல்லாததாலும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சுரபுன்னை காட்டுப் பகுதிக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர். …

The post ஞாயிறு ஊரடங்கு ரத்து எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Pichavaram ,Chidambaram ,Cuddalore ,Surappunnai ,
× RELATED யூ டியூப் பார்த்து தயாரித்த பெட்ரோல்...