×

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது’ என்று உறுதிபட தெரிவித்துவிட்ட பிறகும் திடீரென தேவையற்ற பிரச்னையைக் கிளப்புவது நல்லதல்ல. இதனால், தமிழக-கேரள மக்களிடையே தேவையற்ற கசப்புணர்வே ஏற்படும். எனவே, மத்திய நீர்வள ஆணையம் நடுநிலையோடு நடந்து கொண்டு, தமது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வலுவான எதிர்வினை ஆற்ற வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

The post முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை: டிடிவி தினகரன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Central Water Commission ,Mullapiriyarai Dam ,DTV Dinakaran ,Chennai ,Amadam ,General ,Mullapiperiyar dam ,Dinakaran ,
× RELATED தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி...