×

தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்: பலிகர்ம பூஜை செய்து கடலில் புனித நீராடினர்

கன்னியாகுமரி: இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் இன்று(31ம் தேதி) தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் குவிந்த மக்கள், புனித நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள் அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரயில் நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.தற்போது ஊரடஙகில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆண்டு தை அமாவாசைக்கு கன்னியாகுமரி கடலில் மக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தார்கள். அதேநேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைசெய்து, கடலில் புனித நீராட வேண்டும் என்று காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையால் அறிவுறுத்தப்பட்டது….

The post தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்: பலிகர்ம பூஜை செய்து கடலில் புனித நீராடினர் appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Mudal ,Sangam ,Tathi Amavasa ,Hindus ,Kanyakumari ,Triple ,Baligarma Puja ,Dinakaran ,
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...