×

பாபநாசம் படித்துறையில் தடை: அய்யா கோயில் பகுதியில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்

வி.கே.புரம்: தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த மூதாதையர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து இந்துக்கள் வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டு காலமாக பாபநாசம்,  தாமிரபரணி ஆற்றில் இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பாபநாசம் படித்துறையில் தான் இந்துக்கள், இறந்த மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பாபநாசம் படித்துறையில் தர்ப்பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டு, பாபநாசம் யானைப்பாலம் அருகே உள்ள முக்கூடல் பகுதியிலும், தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகிலும் தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால், ஏராளமானோர் இந்த 2 இடங்களிலும் தர்ப்பணம் கொடுத்தனர். போக்குவரத்திலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து தனியார் வாகனங்களையும் டானாவில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.அங்கிருந்து நடந்து சென்று தர்ப்பணம் செய்ய அனுமதித்தனர். அரசு போக்குவரத்து வாகனங்கள் பாபநாசம் பணிமனை வரை செல்ல அனுமதிக்கப்பட்டன. அதுபோல் உலகம்மை சமேத பாபநாசம் சுவாமி கோயில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்….

The post பாபநாசம் படித்துறையில் தடை: அய்யா கோயில் பகுதியில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Babanasam Padithurai ,Ayya temple ,Tai ,Adi Amavasi ,Hindus ,Babanasam Padithura ,
× RELATED மூக்குப்பீறி அய்யா கோயிலில் சித்திரை பால் முறை திருவிழா