×

நகைக்கடன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி நான், ஒன்றிய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பாராட்டும் அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நகைக்கடன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Union Government ,Chennai ,Union ,Finance Minister ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல்..!!