×

காரைக்காலில் சிமெண்ட் சாலை, நெல் கிடங்கு அமைக்கும் பணி

காரைக்கால், மே 30: காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியில் உள்ள வடக்கு தெரு மற்றும் நடுத்தெரு ஆகிய பகுதிகளில் புதுச்சேரி அரசு காரைக்கால் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையானது நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் (நிர்வாகம்) மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி செந்தில் நாதன் முன்னிலை வகுத்தார். இதனைத் தொடர்ந்து நெடுங்காடு மேல அன்னவாசல் பகுதியில் காரைக்கால் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் நெல் கிடங்கு மற்றும் நெல் களம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் சிமெண்ட் சாலை, நெல் கிடங்கு அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry Government ,Karaikal Rural Development Department ,North Street ,Middle Street ,Kotucherry Medu ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா