×

வைகோவின் சகோதரி மறைவு

சென்னை: சென்னை அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனி பகுதியில் வசித்து வந்தவர் சரோஜா. இவர் தமிழ்நாட்டில் மூத்த அரசியல்வாதியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான வைகோ அவர்களின் இரண்டாவது சகோதரி ஆவார்.

இந்நிலையில், நேற்று இவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். இவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த சரோஜா அவர்களின் உடல் இன்று 1 மணிக்கு அரும்பாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வைகோவின் சகோதரி மறைவு appeared first on Dinakaran.

Tags : Vigo ,Chennai ,Saroja ,Ayyavu Naidu Colony ,Wiko ,Tamil Nadu ,Renaissance Dravitha Development Corporation ,Waiko ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்