×

முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

புதுடெல்லி: அதானி குழும பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச்க்கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதானி குழுமம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பணப் பரிமாற்ற ஊழலில் பயன்படுத்தப்பட்ட தெளிவற்ற வெளிநாட்டு நிதிகளில் மாதபி பூரி புச்சும் அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியது.

இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டதால் அவர் பதவியில் இருந்து விலகினார். மாதபி பூரி புச் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் விசாரித்தது. மாதபி மீதான குற்றச்சாட்டுகள் அனுமானங்கள் அடிப்படையில் கூறப்பட்டவை. எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று கூறி புகார்களை லோக்பால் தள்ளுபடி செய்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஇஓ உள்பட 5 பேருக்கு தடை;
வங்கியின் பங்குகளில் உள் வர்த்தகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுமந்த் கத்பாலியா உட்பட 5 பேருக்கு செபி ரூ.19.78 கோடி அபராதம் விதித்துள்ளது. அவர்கள், பங்கு சந்தைகளை அணுகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : SEBI ,Madhabi Puri Buch ,New Delhi ,US ,Hindenburg ,Adani Group ,Adani Group… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...