×

குச்சனூர் மெயின்ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாறுகால் அமைப்பு தீவிரம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, குச்சனூர் பேரூராட்சியில் 11 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. உத்தமபாளையம்-உப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊர் வழியாக தினசரி சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மெயின் ரோட்டில் இருபுறமும் இருந்த வாறுகால்கள் குறுகியதாக இருந்ததால், ஊரிலிருது வரும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன், குச்சனூரிலிருந்து ராஜபாளையம் வரை சாலையின் ஒரு பகுதியில் வாறுகாலை ஆழமாகவும், அகலமாகவும் கட்டினர். இந்நிலையில், சாலையின் மறுபுறம் ராஜபாளையத்திலிருந்து போடி விலக்கு பிரிவு வரை வாறுகாலை அகலப்படுத்தி உயரமாக அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post குச்சனூர் மெயின்ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாறுகால் அமைப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuchanur Mainrot ,Chinnamanur ,Kuchanur Bharashi ,Kuchanur Mainroad ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்