×

வடக்கஞ்சேரி அருகே காளாங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு – திருச்சூர் தேசிய சாலையில் வடக்கஞ்சேரி உள்ளது. இங்குள்ள குதிரான் அல்லது பீச்சி வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து வருகிறது. அவ்வாறு ஊருக்குள் புகும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கன்று மற்றும் நாய்களை வேட்டையடி வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளாங்குளத்தை அடுத்துள்ள பனக்கப்பரப்பை சேர்ந்த ராஜன் என்பவரது ஆட்டுக்குட்டியை அடித்துக்கொன்றது. இந்த சிறுத்தை வடக்கஞ்சேரி டவுண் பகுதிகளிலும், காளாங்குளம், மாணிக்கப்பாடம் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு, பகல் நேரங்களில் உலா வருகிறது. சிறுத்தையை பார்த்த ரப்பர் தோட்டத்தொழிலாளர் இது குறித்து வடக்கஞ்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன அதிகாரி சலீம் தலைமையிலான வனஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலீம் உறுதியளித்தார். இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் வரையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்….

The post வடக்கஞ்சேரி அருகே காளாங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முடிவு appeared first on Dinakaran.

Tags : Kalankulam ,Vadakancheri ,Palakkad ,Palakkad – ,Thrissur National Highway ,Kerala ,Kuthiran ,Beechee forest ,Kalangkulam ,Forest department ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...