×

ஜூன் மாதம் ஹஜ் பயணம்; அசோசியேசன் தலைவர் தகவல்

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் இருந்து முழு தளர்வுகள் அறிவித்து பள்ளிவாசல்கள் திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு இஸ்லாமியர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஹஜ் பயணிகள் வருகிற ஜூன் மாதம் அநேக கட்டுப்பாடுகள் தளர்ந்து பதிவு செய்த அனைவரும் மெக்காவிற்கு செல்வார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2022 ஜூன் மாதம் இறுதியில் இருந்து ஹஜ் செல்லும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும். அதற்கான ஆயுத்த பணிகளும் நடைபெற்று வருகிறது.  கொரோனோ நோய் தொற்றின் பயம் காரணமாக ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு செய்யாதவர்களை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆட்சியில் நிச்சயம் தமிழகத்திற்கு ஹஜ் ஹவுஸ் கட்டப்படும். அதுவும் குறிப்பாக சென்னையில் கட்டப்படும். அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் நிச்சயம் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்….

The post ஜூன் மாதம் ஹஜ் பயணம்; அசோசியேசன் தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Association President Information ,Chennai ,Indian Haj Association ,President President ,Abubakar ,Corona ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...