×

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து தொடங்கிவைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான நிதிபத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடக்கூடிய நிகழ்வானது நடைபெற்றது. தமிழ்நாடு அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

இதில் குறிப்பாக வட சென்னையில் மழை காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையிலான கொசஸ்தலை ஆறு வடிநிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 769 கி.மீ தூரத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கு அசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 70%-க்கும் மேலாக நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமான திட்டங்களை செயல்படுத்த கூடிய வகையில் நிதி ஆதாராங்களுக்காக தற்போது ரூ.200 கோடி மதிப்பீட்டில் நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடக்கூடிய நிகழ்வினை முதல்வர் தொடங்கிவைத்தார்.

உலக வங்கி உள்பட பண்ணாட்டு வங்கிகளிடம் கடன்பெற்று அதிக சதவீதத்திலான வட்டி கட்டவேண்டிய நிலை உள்ளதை அடுத்து மற்றொரு மாற்று ஏற்ப்பாடாக தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பாண்டு மூலமாக நிதியை திரட்ட முடியும். அவ்வாறாக ரூ.200 கோடி மதிப்பிலான நிதி திரட்டப்பட்டு, வட சென்னையில் கொசஸ்தலை ஆறு வடிநீர், வடிநில பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஆதாரத்தை பயன்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai Municipal Corporation ,National Stock Exchange ,K. Stalin ,Chennai ,Municipal Administration and Drinking Water Supply Department ,Metropolitan Chennai Municipal Corporation ,Chennai Kalaivanar Arena ,K. ,Stalin ,Dinakaran ,
× RELATED வரைவு பட்டியலில் விடுபட்டவர்களை...