×

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை 5ம்தேதி மோடி திறந்து வைக்கிறார்; உலகின் 2வது மிகப்பெரிய சிலை.!

திருமலை: வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். தனக்கு போதித்த ‘ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலைநாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க பிள்ளையார் சுழி போட்ட வைணவ புரட்சி நாயகன். இவரது 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அவருக்கு ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் 216 அடி உயரத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான ‘சமத்துவ சிலை’ நிறுவப்பட்டுள்ளது. சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் 120 கிலோ அளவு தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, நடுவே, யானைகள் தாங்கிப்பிடிக்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் பத்மபீடம் (தாமரை) 2 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. 2 அடுக்குகளிலும் 18 சங்கு, 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளது. பீடம் 108 அடி, சிலை 108 அடி என 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை உலகின் 2வது மிகப்பெரிய சிலையாகும். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடுத்தபடியாக உலகின் 2வது உயர்ந்த சிலையாக ராமானுஜரின் சிலை கருதப்படுகிறது. மேலும் இங்கு செயற்கை நீர் வீழ்ச்சி தூண், ஆன்மிக நூலகம், உணவகம், தியான வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை உருவாக்கும் பணி கடந்த 2016ம் ஆண்டு திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமி தொடங்கி வைத்தார். இதற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றது. இந்த சமுத்துவ ராமானுஜர் சிலையை வரும் 5ம்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பின்னர் வரும் 13ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்ய உள்ளார். 14ம்தேதிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளது….

The post ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை 5ம்தேதி மோடி திறந்து வைக்கிறார்; உலகின் 2வது மிகப்பெரிய சிலை.! appeared first on Dinakaran.

Tags : 5Madheti Modi ,Ramanujar ,Hyderabad ,Vainava Mahan Sriramanujar ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்