×

நயன்தாரா படத்தை இயக்கிய இயக்குனர் மீது மோசடி புகார்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த “அறம்” படத்தை இயக்கியவர் இயக்குனர் கோபி நயினார். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று நயன்தாரா மற்றும் கோபி நயினார் ஆகிய இருவருக்கும் நற்பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கையை சேர்ந்த சியாமளா யோகராஜா என்ற பெண் தொழிலதிபர் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

சியாமளா யோகராஜா அளித்துள்ள மனுவில் “நான் இலங்கையை சேர்ந்தவள், தற்போது பிரான்ஸ் நாட்டில் வரித்துவருகிறேன். நடிக்க நயன்தாரா நடித்துள்ள அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் என்று பெயரில் படம் எடுத்தப்போவதாக கூறினார். எனக்கு தெரிந்த பட அதிபரும் அதை உறுதி செய்தார்.

அந்த படத்தில் என்னையும் தயாரிப்பாளராக இணைத்து கொள்வதாகவும் படத்தில் கிடைக்கும் லாபத்தில் 25% எனக்கு தருவதாகவும் சொன்னார். அதன் நம்பி சென்னை வந்து 30 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தேன். புதிய படத்திற்கான பூஜையிலும் கலந்து கொண்டேன். பின்னர் ஃபிரான்ஸ் சென்று விட்டேன்.

இதையடுத்து திடீரென படத்தை நிறுத்திவிட்டதாக கூறினர்.இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதும் என்னுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனவே சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு எனக்கு அந்த பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என இலங்கையை சேர்ந்த பெண் தொழிலதிபர் சியாமளா யோகராஜா தெரிவித்துள்ளார்.

The post நயன்தாரா படத்தை இயக்கிய இயக்குனர் மீது மோசடி புகார்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Gopi Nayanar ,Gopi Nayyar ,Gobi Nayanar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தயாரிப்பில் பிசி ஆகும் இயக்குனர் அட்லீ