×

திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம்

 

திருப்புத்தூர், மே 23: திருப்புத்தூரில் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டல பொறுப்பாளரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது: இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகமும், நம்பர் ஒன் முதல்வராக மு.க.ஸ்டாலினும் விளங்கி வருகிறார். ஒன்றிய அரசின் நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், இதற்கிடையில் தன்மான ஆட்சியினை முதல்வர் நடத்தி வருகிறார். 2026 ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அவரே இரண்டாவது முறையாக முதல்வராக அமர வேண்டும், எனப் பேசினார்.

The post திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DIMUKA DISTRICT CORPORATION ADMINISTRATORS ,Tiruptuur ,Dimuka District Corporation ,District ,Attorney ,Ganesan ,Deputy Secretary ,District Council ,Shangaimaran ,Minister of Finance ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...