×

மல்லாங்கிணறில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

 

காரியாபட்டி, மே 23: மல்லாங்கிணறில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் நடைபெற்றது. நிதி அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கம்தென்னரசு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்தும், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, மதுரையில் நடைபெறவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எம்எல்ஏ சீனிவாசன், முன்னாள் எம்பி பவானிராஜேந்திரன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி ஒன்றிய நகர செயலாளர்கள் உட்பட வடக்கு மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post மல்லாங்கிணறில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK District ,Executive ,Committee ,Mallanginar ,Kariyapatti ,Minister ,Thangamthennarasu ,DMK ,Virudhunagar ,North District DMK Executive Committee ,Finance Minister ,North District ,Thangamthennarasu… ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது