×

காரிமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி

காரிமங்கலம், மே 23: காரிமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி, கடந்த 20ம்தேதி தொடங்கியது. காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியாம்பட்டி ஆகிய பிர்காக்களுக்கு 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்றும் நடைபெற்றது. 3 நாட்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 388 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் ஆராயப்பட்டு 48 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணி தலைமை வகித்து தேர்வு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களுக்கு, அதற்குரிய ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் மனோகரன், சுகுமார், துணை தாசில்தார்கள், ஆர்ஐக்கள், விஏஓக்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.

The post காரிமங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jamabandhi closing ceremony ,Karimangalam ,taluka ,Kambainallur ,Periyampatti Pirga ,Jamabandhi closing ceremony in ,
× RELATED ஓய்வூதியர் தின விழா