×

மம்மூட்டிக்கு பதிலாக நடித்த பசுபதி

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் ராம் சங்கையா பேசியதாவது: தமிழ்நாட்டு கலாசாரங்களில் ஒன்று மூதாட்டிகள் தண்டட்டி அணிவது.

இந்த பின்னணியில் இந்த படம் காமெடியாக உருவாகி உள்ளது. மதுரை, தேனி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் 15 பேர் நடித்துள்ளனர். தங்கம் தமிழர்களின் வாழ்வோடு கலந்தது. சில நேரங்களில் வாழ்வை தீர்மானிப்பது. அதைத்தான் இந்த படம் பேசுகிறது. நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்த படத்திற்கு நான் மம்மூட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்மூட்டியை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால். எனக்கு பசுபதி கிடைத்து விட்டார்.

The post மம்மூட்டிக்கு பதிலாக நடித்த பசுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Passupathi ,Mammooti ,Lakshman Kumar ,Prince Pictures ,Ram Sankaya ,Pazupathi ,Rogini ,Vivek Prasanna ,Ammu Abhirami ,Deepa ,Semmalar Anam ,Bovitha ,Pashupati ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலையாளத்தில் மம்மூட்டி – ஜோதிகா...