×

பைக் ரைட் நிறுவனத்துக்காக ₹9 கோடியில் 8 பைக் வாங்கிய அஜித்: சுற்றுப்பயண வாடகை ₹10 லட்சம்

சென்னை: தனது பைக் ரைட் நிறுவனத்துக்காக ரூ.9 கோடி செலவில் 8 பைக்குகளை அஜித் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏகே மோட்டார் ரைடு என்ற மோட்டார் பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கி இருப்பதாக அஜித் அறிவித்திருந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் பைக்குகளை வாடகைக்கு எடுத்து உலகம் முழுவதும் பைக் ரைடர்கள் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் தனது நிறுவனத்துக்கு பல கோடி மதிப்பில் பைக்குகளை அஜித் வாங்கியுள்ளாராம்.

அஜித் தனது நிறுவனத்துக்கு இதுவரை 8 பைக்குகளை ஆர்டர் செய்திருப்பதாகவும் இந்த பைக்குகளை ரூ.9 கோடிக்கு அவர் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பைக்குகளுக்கு வாடகையாக 10 லட்சம் ரூபாய் வரை பைக் ரைடர்களிடம் வசூலிக்க அஜித் திட்டமிட்டுள்ளாராம். இதன் மூலம் தனது நிறுவனத்தை பலப்படுத்தவும் அஜித் யோசித்திருக்கிறாராம்.

The post பைக் ரைட் நிறுவனத்துக்காக ₹9 கோடியில் 8 பைக் வாங்கிய அஜித்: சுற்றுப்பயண வாடகை ₹10 லட்சம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ajith ,CHENNAI ,AK Motor Ride ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ்நாடு வீரர் நடராஜன் பிறந்தநாள்;...