×

ரூ.1.97 கோடியில் 486 பேருக்கு நலத்திட்ட உதவி எம்எல்ஏ வழங்கினார் கலசப்பாக்கம் ஜமாபந்தி முகாமில்

கலசப்பாக்கம், மே 22: கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமை தாங்கினார். தாசில்தார் தேன்மொழி வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு 486 பயனாளிகளுக்கு ரூ.1.97 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் பட்ஜெட் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கலசப்பாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத எண்ணற்ற திட்டங்கள் அமைச்சர் எ.வ.வேலு முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலங்கள், கோயில் திருப்பணிகள், ஜவ்வாது மலையில் பத்திரப்பதிவு அலுவலகம், எலத்தூர் கிராமத்தில் போக்குவரத்து பணிமனை தொடங்கிட நடவடிக்கை என பல்வேறு துறைகளில் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில் பிடிஓ பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், நகர செயலாளர் சவுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.1.97 கோடியில் 486 பேருக்கு நலத்திட்ட உதவி எம்எல்ஏ வழங்கினார் கலசப்பாக்கம் ஜமாபந்தி முகாமில் appeared first on Dinakaran.

Tags : MLA ,Kalasappakkam Jamabandhi Camp ,Kalasappakkam ,Jamabandhi ,Kalasappakkam Taluka Office ,Assistant ,Kumaran ,Tahsildar Thenmozhi ,District Distribution Officer ,Jagatheesan ,Social Security Scheme ,Tahsildar Lalitha ,Dinakaran ,
× RELATED பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு...