×

உபியில் 2 ரயில்களை கவிழ்க்க சதி

ஹர்தோய்: டெல்லியிலிருந்து அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டம் தலேல்நகர் – உமர்தாலி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் மரக் கட்டைகளை மர்ம நபர்கள் கட்டி வைத்திருந்தனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர், அவசர பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். அதேபோல், கத்கோடம் எக்ஸ்பிரஸ் ரயிலையும் தடம்புரளச் செய்ய முயற்சிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநரின் விழிப்புணர்வால் இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

The post உபியில் 2 ரயில்களை கவிழ்க்க சதி appeared first on Dinakaran.

Tags : Hardoi ,Rajdhani Express ,Delhi ,Dibrugarh ,Assam ,Talelnagar ,Umar Dali ,Hardoi district ,Uttar Pradesh ,UP ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு