×

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், மே 21: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 23ம்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டத்திற்கு, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District ,Collector ,Uma ,Thiruchengode ,Namakkal Panchayat Union Office… ,Dinakaran ,
× RELATED கிரேன் ஆபரேட்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு