பாலக்காடு: கெயின் காஸ் பைப்லைன் ஸ்டேஷன் அமைக்கும் பணி பாலக்காடு மாவட்டத்தில் கஞ்சிக்கோட்டில் கனால்ப்பிரிவில் முழுமைபெற்றுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ஸ்டேஷன் நாட்டிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. தி பெட்ரோலியம் ஆன்ட் எக்ஸ்ப்ளோசிவ் ஷேப்ட்டி அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் வரும் மார்ச் மாதம் கஞ்சிக்கோடு தொழிற்பேட்டைக்கு பைப் லைன் வழியாக காஸ் விநியோகம் நடைபெறும். தொடர்ந்து வீடுகளுக்கும் பைப் லைன் மூலமாக காஸ் வினியோகிக்கப்படும். கஞ்சிக்கோடு கனால்ப்பிரிவை தொடர்ந்து வாணியங்குளம், லக்கிடி, பேரூர், முண்டூர், மலம்புழா, புதுசேரி ஆகிய இடங்களில் பைப் லைன் காஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக வீடுகளுக்கும் காஸ் சப்ளை தொடங்கப்படும் கெயின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்….
The post கெயின் காஸ் பைப்லைன் ஸ்டேஷன் விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.