×

புளூடூத், ஆள்மாறாட்டத்துடன் நவோதயா பள்ளி பணிக்கு நடந்த தேர்வில் மோசடி: அரியானா, இமாச்சலில் 50 பேர் கைது

சிம்லா: அரியானா, இமாச்சலில் புளூடூத், ஆள்மாறாட்டத்துடன் நடந்த நவோதயா பள்ளி பணியாளர் தேர்வு மோசடியில் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிக்கு அரசு பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 18ம் தேதி நடந்தது. சிம்லாவில் நடந்த தேர்வு மையங்களில், ஆறு மைய மேற்பார்வையாளர்களின் புகாரின் அடிப்படையில், தேர்வர்கள் சிலர் புளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி வெளியில் உள்ளவர்களிடமிருந்து பதில்களை கேட்டு தேர்வை எழுதியது தொியவந்தது.

அதனால் அரியானா, ராஜஸ்தான், ெடல்லி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் மீது, பொது தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) சட்டம், 2024 மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை மேலும் விசாரிக்க, ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 39 வேட்பாளர்கள் மீது ஐந்து எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரியானா மாநிலம் சண்டிகரில் நடந்த நவோதயா வித்யாலயா சமிதி தேர்வில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டம் தொடர்பாக நான்கு வெவ்வேறு வழக்குகளில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்வு மைய அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செக்டர் 27ல் உள்ள மோதி ராம் ஆர்யா மூத்த மேல்நிலைப் பள்ளியில், ஹிசார் மற்றும் நர்வானாவைச் சேர்ந்த தேர்வர்களுக்கு பதிலாக தேர்வு எழுத முயன்ற அஜய் குமார் (23), மோனிகா தேவி (27) ஆகியோர் பரிசோதனையில் பிடிபட்டனர்.

ஒரு குற்றவாளியிடம் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மின்னணு சாதனமும் கைப்பற்றப்பட்டது. செக்டர் 47ல் உள்ள மவுண்ட் கார்மல் பள்ளியில், ஹிசாரைச் சேர்ந்த விஷால் மாலிக் (28) மறைத்து வைத்திருந்த மின்னணு சாதனத்துடன் பிடிபட்டார். செக்டர் 40சி-யில் உள்ள  குரு ஹர்கிரிஷன் மூத்த மேல்நிலைப் பள்ளியில், மூன்று பெண்கள் உட்பட 12 நபர்கள் மின்னணு சாதனங்கள் மூலம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் பெரிய தேர்வு மோசடியுடன் தொடர்புடையதாக கருதப்படுவதால் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

The post புளூடூத், ஆள்மாறாட்டத்துடன் நவோதயா பள்ளி பணிக்கு நடந்த தேர்வில் மோசடி: அரியானா, இமாச்சலில் 50 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Haryana, Himachal ,Shimla ,Navodaya ,Navodaya Vidyalaya Samiti ,Himachal Pradesh ,Shimla… ,Dinakaran ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...