- திண்டுக்கல்
- திண்டிகுல் நகர்
- வடக்கு காவல் நிலையம்
- இன்ஸ்பெக்டர்
- வெங்கடாசலபதி
- எஸ்.ஐ. சரத்குமார்
- கக்கன்னகர்
- தின மலர்
திண்டுக்கல், மே 19: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, எஸ்ஐ சரத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கக்கன் நகர் அருகே கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் குள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துகாமாட்சி (24), கக்கன் நகரை சேர்ந்த சங்கரபாண்டி (21), ஆதிப்பிரியன் (19), கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் (31), ஓஎம்ஆர்-பட்டியை சேர்ந்த செந்தில் (எ) மினி மண்டையன் (32) என்பதும், கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
The post திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.